Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பழனிபாபா தீவிரவாதி கிடையாது; பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி! சீமானின் இடியாப்ப சிக்கல் பேச்சு..!!

பழனிபாபா தீவிரவாதி கிடையாது; பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி! சீமானின் இடியாப்ப சிக்கல் பேச்சு..!!

மதுரையில் நடந்த பழனிபாபாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதிதான் என்று ஆவேசமாக பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் மூலமாக மத்திய அரசு நாடகம் போடுவதாக குற்றம் சாட்டினார். ரஜினியின் படங்கள் எல்லாமே வன்முறையை தூண்டும் படங்களாகவே இருப்பதாகவும், நிஜத்தில் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி நடிப்பதாகவும் விமர்சித்தார். துக்ளக் படிப்பவர்கள் அறிவாளி என்று கூறிய ரஜினி, தான் நடித்த படம் ஓடுவதற்காக மண் சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு வளர துக்ளக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நகைச்சுவையாக சிரித்து கிண்டலடித்தார்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்று மேடையில் பேசினார். மேலும், பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்க கூடாது என்று கூறிய சீமான், பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதிதான் என்று ரோலிங் ஆகி எல்லோரையும் குழப்பினார்.

கருத்தால் வீழ்த்தி இருந்தால் பழனிபாபா ஒரு தீவிரவாதி என்றும், அவரை வெட்டி வீழ்த்திய செயலே தீவிரவாத பயங்கரவாதம் என்றும் மீண்டும் இடியாப்ப சிக்கலாக பேசினார். பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்க கூடாது என்று கூறிவிட்டு, பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதிதான் என்று பேசியது அங்கு இருந்த கூட்டத்தினரிடையே கையை தட்டலாமா வேண்டாமா என்கிற யோசிக்க வைத்துவிட்டது.

Exit mobile version