சீரம் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றொரு மருந்து நிறுவனமான அஸ்திரா ஜெனேகா என்ற நிறுவனத்துடன் சேர்ந்து புனேவில் இருக்கின்ற இந்திய நிறுவனமான சீரம் நிறுவனமானது கோவிஷீல்டு தடுப்பூசியை தயார் செய்து கொடுத்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில், இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு இயக்குனரகம் சென்ற 3ஆம் தேதி கொடுத்திருக்கின்றது. ஐதராபாத் பயோடெக் நிறுவனம் தயார் செய்து வழங்கிவரும் கோவாக்சின் தடுப்பு மருந்து போன்றதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து இந்த தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த 16ஆம் தேதி நாடு முழுவதும் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. புனேவில் இருக்கின்ற இந்திய சீரம் நிறுவனம் தயார் செய்து கொடுக்கும் கோவிஷீல்டுக்கு தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகின்றது. நேபாளம் பூடான் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், சீரம் நிறுவனத்தில் கடந்த 21ஆம் தேதி திடீரென்று தீ விபத்து உண்டானது. அந்த சமயத்தில் நுழைவாயிலில் இருக்கின்ற ஒரு கட்டிடத்தின் நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளில் தீ விபத்து அதிகமாக பரவியது இதில் ஐந்து பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
இந்த தீ விபத்திற்கு காரணம் கட்டிடத்தில் நடைபெற்று வந்த வெல்டிங் வேலை தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று இரவு சந்தித்து உரையாடி இருக்கிறார். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் இந்த தீ விபத்தில் தடுப்பூசி தயார் செய்யும் பகுதி, மற்றும் அதனை பாதுகாத்து வைக்கும் பகுதிகள் எதுவும் பாதிப்படைய வில்லை என்று தெரிவித்தார். இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். ஆய்வு செய்து வருகிறார்கள் அந்த ஆய்வு அறிக்கை வரும் வரையில் எந்த ஒரு முடிவும் எடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.