அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

0
288
selection-for-agni-players-apply-by-this-date

அக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானம், கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர், இளம் பெண்களை சேர்க்கும் திட்டமே அக்னிபாத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும்.

அதன்படி இந்த முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.இவர்களை அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்றவை நடைபெறும். அதனைத் தொடர்ந்து இந்த சோதனைகள் முடிந்த பிறகு பொது நுழைவு தேர்வு எனப்படும் எழுத்து தேர்வு நடத்தப்படுகின்றது.

அனைத்திலும் தேர்வாகும் வீரர்களுக்கு ஆறு மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பிறகு மூன்றரை  ஆண்டுகள் அவர்கள் வேலை செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மூன்றரைக் காலம் முடிவிற்கு வரும்பொழுது மேலும் பணியாற்ற விரும்பும் வீரர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் 25 சதவீத வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீத  வீரர்கள் சேவா நிதி கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

தேர்வாகும் 25 சதவீத வீரர்கள் நான்கு ஆண்டுகள் முழுவதும் பணியாற்றலாம் அவர்கள் காப்பீடு திட்டமாக 45 லட்ச ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ராணுவத்தில் அக்னி வீரர்கள் மற்றும் வழக்கமான பணியாளர்கள் பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்புகாண தேர்வு நடைபெறுகிறது. இதில் இணைந்து பணியாற்ற தகுதி வாய்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் வரும் மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் எழுத்து தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு பணி என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த தேர்வுக்கு கட்டணமாக 250 செலுத்த வேண்டும். எஸ் ஓ இ எக்ஸ் மற்றும் எஸ் ஓ எஸ் விளையாட்டு வீரர்கள் ,என்சிசி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் உடற்பகுதி தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு, மருத்துவம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.