சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!!

0
899
Self-respect is important..Phamaka left due to BJP's action..!!

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!!

தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் மிகவும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் செயலால் பாமக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து தான் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை போன்ற எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பாஜக வேட்பாளர் சார்பிலோ, தலைமை சார்பிலோ பாமகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கோவை மாவட்ட பாமக சார்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி கோவை மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பாமகவிற்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை. கூட்டணி தர்மம் முக்கியம் தான் என்றாலும், அதைவிட சுயமரியாதை தான் முக்கியம்.

கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் எந்த ஒரு கூட்டணி கட்சி தலைவர்களையும் மதிப்பதில்லை. நாங்கள் மட்டுமல்ல ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சிகளுமே மனவருத்தத்தில் தான் உள்ளனர். எனவே கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு மன வருத்தத்துடன் தேர்தல் பணிகளில் இருந்து வெளியேறுகிறோம்” என கூறியுள்ளார்.