Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போலீஸார் விசாரணை!

Selling cannabis to school and college students! Police investigation!

Selling cannabis to school and college students! Police investigation!

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போலீஸார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று குளச்சல் பகுதியில்  ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது லட்சுமிபுரம் தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது அங்கு 2 இளைஞர்கள் பைக்கை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.

மேலும் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பள்ளம் அன்னைநகரை சேர்ந்த காட்சன்(வயது18) என்பதும் தற்போது இவர்  குளச்சல் மார்க்கெட் ரோட்டில் தாமசித்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. மற்றொருவர் வாணியக்குடியை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளி ஆரோக்கிய தினேஷ்(வயது 22) என்பதும் இவர்கள் இருவரும் பள்ளி மற்றும்  கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சித்ததும் விசாரணையில் தெரிந்தது. உடனே போலீசார் பைக்கில் மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Exit mobile version