Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!!
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார்.
மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் டி பி ஐ அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய கட்சி, இதனால்தான் பாஜகவினர் சிறுபான்மையினரால் வெறுக்கப்படுகின்ற கட்சியாக உள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் பொதுமக்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த மாநாட்டை அண்ணாமலை அப்படி கூறினார் என்றால் அவருக்கு வாய்க் கொழுப்பு தான்” என்று கூறினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை, ” எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்..   குறைப்பதற்கு ஏதேனும் முயற்சி எடுத்தால் அதனை மேற்கொள்ளுங்கள்”
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியா, மோடியா என கோஷம் எழுப்பி பரப்புரை செய்வோம் என்ற கேள்விக்கு, “நான் சிரித்து விட்டேன் எனக் கூறுங்கள்” என்று கூறினார்.
Exit mobile version