Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்!

என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்!

பொன்னியின் செல்வன் பாடல்களை இயக்குனர் செல்வராகவன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் சக்கை போடு போட்ட நிலையில் தீபாவளியைக் கடந்தும் இன்னும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதுவும் தீபாவளிப் படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவராததால் பொன்னியின் செல்வனுக்கு அதிகளவில் திரையரங்குகள் மீண்டும் ஒதுக்கப்படுகின்றன.

உலகமெங்கும் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள நிலையில் விரைவில் 500 கோடி ரூபாய் வசூலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய பென்ச் மார்க்கை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசையும் அமைந்தது. படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் வெகுவாக சிலாகிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தின் பாடல்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அதில் “நான் என் வாழ்க்கையில் கேட்ட மிகச்சிறந்த ஆல்பம் பொன்னியின் செல்வன். நுணுக்கமான சில இடங்களில் கூட கவனம் செலுத்தி ஆச்சர்யப்படுத்தி உள்ளனர்” என ட்வீட் செய்ய அது வைரல் ஆனது. அந்த ட்வீட்டை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான் “நன்றி செல்வா” எனக் கூறி ரிட்வீட் செய்துள்ளார்.

Exit mobile version