Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் ரசிகர்களுக்கு வெளிவந்த செம ட்ரீட்! வாரிசு திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியீடு!

Sema treat for Vijay fans! Varis movie released on OTT platform this month!

Sema treat for Vijay fans! Varis movie released on OTT platform this month!

விஜய் ரசிகர்களுக்கு வெளிவந்த செம ட்ரீட்! வாரிசு திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியீடு!

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில்,இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரிசு.இந்த படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிறப்பு, சரத்குமார, பிரகாஷ்ராஜ் அதனையடுத்து தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா என பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளனர்.

மேலும் இந்த வாரிசு திரைப்படம் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது என அந்த படத்தின் தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த படம் எப்போது ஒடிடி திரையரங்கில் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

தற்போது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அந்த தகவலில் வாரிசு தாயரிப்பு நிறுவனம் கூறுகையில் வரும் 22 ஆம் தேதி முதல் வாரிசு திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஒலிபரப்பு ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version