Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நேற்று மதுரையில் உள்ள நியாய விலை கடைகளை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செய்லர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:!

வருகிற அக்டோபர் 6-தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறினார்.

மேலும் இதைத் தொடர்ந்து பேசிய அவர்,ரேஷன் கடைகளில் அரிசி வாங்க மக்களே கட்டாயப்படுத்த கூடாது என்றும்,அரிசி வாங்கவில்லை என்றால் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மக்களை பயமுறுத்தக் கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.மேலும் நீங்கள் அரிசி வாங்கவில்லை என்றாலும் உங்கள் ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், இதன் மூலம் தேவையானவர் மட்டும் அரிசி வாங்க முடியும் இதனால் அரிசி கடத்தலையும் தடுக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் நாம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி வருகிறோம் என்றும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் அச்சமின்றி அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வட்டி குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version