அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்!! பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
549
Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் தற்போது அரையாண்டு வரும் 9-ம் தேதி நடக்க இருந்த நிலையில் கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி அதிக கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நிலைமையை பொறுத்து ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதன்படி வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும்.

மற்ற இடங்களில் அரை யாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் 9-ம் தேதி முதல் நடைபெறும். 9-ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும். மேலும் அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம். தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ்கள் வைத்திருக்கும் அறைகள் தரை தளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறினார்.

 தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள, 15 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன், அங்குள்ள பள்ளிகளின் நிலை குறித்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக, அமைச்சர் மகேஷ் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், மாணவர்கள் அதன் அருகே செல்லக்கூடாது என்பதை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.