Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செம்ம.. தொப்புள் குழியில் மஞ்சள் பூசுவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா!!

நம் பாரம்பரிய வைத்தியத்தபடி தொப்புளில் விளக்கெண்ணெய் ஊற்றி தடவினால் உடல் சூடு,வயிறு பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நீங்கும்.தொப்புளில் விளக்கெண்ணெய் வைக்கும் பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வரப்படுகிறது.

அதேபோல் தொப்புளில் மஞ்சள் பூசினால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.சமையலில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது.

உடலில் காயங்கள் ஏற்பட்டால் மஞ்சள் பூசினால் அவை சீக்கிரம் காய்ந்து ஆறிவிடும்.இதனால் தான் மஞ்சள் ஒரு வலி நிவாரணி என்று சொல்லப்படுகிறது.மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

சூடான பாலில் மஞ்சள் கலந்து பருகி வந்தால் சளி,தொண்டை வலி,உடல் வலி போன்றவை குணமாகும்.மூக்கடைப்பு,சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் தேநீர் செய்து பருகலாம்.சரும பராமரிப்பில் மஞ்சளின் பங்கு ஈடு இணையற்றது.இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளை தொப்புள் குழியில் பூசுவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

மஞ்சளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:-

1)வைட்டமின் சி
2)ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
3)அலர்ஜி எதிர்ப்பு பண்புகள்
4)குர்குமின்

*தேங்காய் எண்ணெயில் மஞ்சள் சேர்த்து பேஸ்ட்டாக குழைத்து தொப்புள் பகுதியில் பூசுவதால் செரிமானப் பிரச்சனை அகலும்.

*பெண்கள் தொப்புளில் மஞ்சள் பூசினால் மாதவிடாய் காலத்தில் வயிறு வலி மற்றும் வயிறு பிடிப்பு உண்டாவது கட்டுப்படும்.

*மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தொப்புளில் மஞ்சள் பூசி மசாஜ் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

*அஜீர்ணக் கோளாறு,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள தொப்புளில் மஞ்சள் பூசலாம்.

*பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கடுகு எண்ணெயில் மஞ்சள் சேர்த்து தொப்புள் மீது அப்ளை செய்யுங்கள்.

*தொப்புளில் மஞ்சள் பூசுவதால் வைரஸ் நோய் தொற்றுகள் முழுமையாக தடுக்கப்படும்.அதேபோல் தொப்புளில் படிந்துள்ள அழுக்குகள் வெளியேற தேங்காய் எண்ணையில் மஞ்சள் சேர்த்து குழைத்து பூசலாம்.

Exit mobile version