மத்திய அரசின் சிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்று அடல் பென்ஷன் யோஜனா.இது பாதுகாப்பான ஓய்வூதிய திட்டமாகும்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
வயதான பிறகு நிதி சார்ந்த பிரச்சனையை சமாளிக்க இப்பொழுதே ஓய்வூதியம் குறித்து திட்டம் வகுப்பது நல்லது.நீங்கள் உழைக்கும் பணத்தை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.அந்தவகையில் ஓய்வு காலத்தில் சிறந்த ஓய்வூதியம் கிடைக்க மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்களுக்கான ஓய்வூதிய திட்டமாகும்.உழைக்கும் காலத்தில் சிறிய தொகையை முதலீடு செய்து வந்தால் வயதான பிறகு நிதி சார்ந்த பிரச்சனைகளை எளிதில் அணுக முடியும்.இத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
அடல் பென்ஷன் யோஜனா
18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமகன்கள் இத்திட்டத்தை தொடங்க முடியும்.
நீங்கள் செலுத்தும் சந்தா தொகையை பொறுத்து 60 வயதை கடந்த பின்னர் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான ஓய்வூதியம் பெறுவீர்கள்.
சந்தாதாரர் இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.எந்த ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இந்த திட்டத்தில் சேர முடியும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தால் வரிச்சலுகை கிடைக்கும்.நீங்கள் இத்திட்டத்தில் சேர்ந்த பின்னர் உரிய காலத்தில் பணத்தை செலுத்தி வர வேண்டும்.காலதாமதம் செய்தால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டும்.