Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு! கழிவறையிலேயே உயிரிழந்த பாஜகவின் மூத்த அமைச்சர்!

கர்நாடகாவின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார் அவருக்கு வயது 61

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி சட்டசபை தொகுதியின் பாஜக சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வனத்துறை மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்ட இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் இருக்கின்ற அதனுடைய வீட்டுக்கு இரவு 10.30 மணியளவில் வந்தடைந்தார்.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு கழிவறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை இதன் காரணமாக சமையல்காரர் கதவை தட்டிப் பார்த்தார் உள்ளிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை இதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

உள்ளே அமைச்சர் கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு உண்டாகி அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தார்கள்.

இது தொடர்பாக தகவலறிந்த உடன் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்து வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

Exit mobile version