Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!!

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பிறகு கட்சியின் தலைமையை விமர்சித்து, அதில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸின் மூத்த மற்றும் அதிருப்தி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸின் செயற்குழு கூட்டம் கூடியது. அதில் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க உடனடியாக காங்கிரஸ் கட்சியில் அமைப்பு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே கட்சியின் அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கட்சியில் முக்கிய முடிவு ஏதேனும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்து பேசினார்.

அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் கூறுகையில், சோனியா காந்தியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் என்று கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு செய்தனர். மேலும், ஜி-23 குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளை பற்றி சோனியா காந்தியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version