Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி!! மூத்த நிர்வாகி நாம் தமிழர் கட்சியில் இணைப்பு?? சீமான் பதிவால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு!!  

Senior DMK executive Naam Tamil party alliance?? Seeman's report created a stir in political circles!!

Senior DMK executive Naam Tamil party alliance?? Seeman's report created a stir in political circles!!

திமுக கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி!! மூத்த நிர்வாகி நாம் தமிழர் கட்சியில் இணைப்பு?? சீமான் பதிவால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு!!

திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவருமான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இது அரசியல் சுற்றுலா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனென்றால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் வெற்றி பெறவில்லை. கட்சிக்குள்ளேயே, இவருக்கு எதிராக பல திட்டங்கள் போடப்பட்டு இவரை தோற்கடித்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவரது கணவர், ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சுப்புலட்சுமி திமுகவை விட்டு விலகி பாஜக மற்றும் அதிமுகவில் இணைய போவதாக கூறி வந்தனர். அந்த சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அக்கட்சிகள் என் தகுதிக்கு ஈடானவை அல்ல நான் அங்கெல்லாம் கூட்டணி வைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். தற்பொழுது தன்னிச்சையாக இருந்து பாஜகவை விமர்சனம் செய்வதாக வெளிப்படையாக தெரிவித்தார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது சுப்புலட்சுமியை நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பது போல் காணப்படுகிறது.

 

எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு,

https://twitter.com/SeemanOfficial/status/1578039495957839872

இதன்மூலம் சீமான் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பதும்,திமுக -வை விட்டு இவர் ஏன் விலகினார் என்பதையும் அப்பட்டமாக காட்டும் பதிவாக உள்ளது.இதனை பார்த்த பலர் சுப்புலட்சுமி நாம் தமிழர் கட்சியில் இணைய போவதாக கூறுகின்றனர்.

Exit mobile version