Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவில் முதல்வர்  வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்ற குழப்பம் நீண்ட காலமாக அக்கட்சியில் இருந்து வந்த நிலையில் நேற்று இதற்கு ஒரு முடிவு கிடைத்தது.  ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில் உள்ள அமைச்சர்கள்:

  1. எஸ் பி வேலுமணி 
  2. தங்கமணி 
  3. திண்டுக்கல் சீனிவாசன் 
  4. சிவி சண்முகம் 
  5. ஆர் காமராஜ்
  6. ஜேசிடி பிரபாகர் 
  7. மனோஜ் பாண்டியன் 
  8. மோகன் 
  9. ஆர் கோபாலகிருஷ்ணன்
  10. மாணிக்கம்

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு இபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்சியை வழி நடத்துவதற்கான வழிகாட்டுதல் குழு தற்போது தான் அமைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது சுமார் 40 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் கட்சித் தலைவர்கள் முடிவு எடுப்பதற்காக வழிகாட்டும் வகையில் முதல் முறையாக இந்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் பெண்களும், இஸ்லாமிய பிரதிநிதியும் இடம்பெறவில்லை என்பது பலரால் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக ஒரு கம்பீரமாக பெண்ணாக கட்சியை வழி நடத்தியவர் தான் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்ளும் ஆளும் கட்சியினர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சியின் சீனியர்கள் ஆன செங்கோட்டையன், தம்பிதுரை, அன்வர்ராஜா, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், மைத்ரேயன் ஆகியோர் இந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version