தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்!

0
192
#image_title

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்!

கேரள மாநிலம் வயநாடு அருகே சீனியர் மாணவர்களால் தொடர்ந்து 29 மணி நேரம் ராகிங் செய்யப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு அருகே பூக்கோடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சித்தார்த்தன் என்ற மாணவர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி விடுதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் தற்கொலைக்கு சீனியர் மாணவர்களின் ராகிங் தான் காரணம் என சித்தார்த்தின் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதி காலை 9 மணி முதல் 17ஆம் தேதி மதியம் 2 மணி வரை தொடர்ந்து 29 மணி நேரம் மாணவர் சித்தார்த்தை சீனியர் மாணவர்களும் சக மாணவர்களும் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர்.

இதில் சித்தார்த்தை பெல்டால் அடித்தும், கைகளால் தாக்கியும் மிகவும் கொடூரமாக ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சித்தார்த்தன் இனி விடுதியில் தங்கி படிக்கவும் முடியாது, வீட்டிற்கும் செல்ல முடியாது என்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து 29 மணி நேரம் கொடூரமாக ராகிங் செய்ததில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.