Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைநகர் சென்னையில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் இதுதான்!

சென்னையில் இன்றைய தினம் மின்தடை உண்டாகும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மின் வாரியம் சார்பாக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னையில் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வினியோகம் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

மதுரவாயல் பகுதியில் எம்எம்டிஏ காலனி மற்றும் வரலட்சுமி நகர், கங்காநகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், ராஜீவ் காந்தி நகர், கணபதி நகர், ஐயப்பன் நகர், பாலமுருகன் நகர், ராஜ ராஜன் நகர், வானகரம், மேட்டுகுப்பம் ரோடு பகுதி மற்றும் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகளிலும் நாளைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரியம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

Exit mobile version