Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோட்டில் பரபரப்பு! கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து பெண் பலி!

Sensation in Erode! Car and two-wheeler collide head-on, woman dies!

Sensation in Erode! Car and two-wheeler collide head-on, woman dies!

ஈரோட்டில் பரபரப்பு! கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து பெண் பலி!

ஈரோடு மாவட்டம் பவானி பி.மேட்டுபாளையம் ,திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி.இவருடைய மனைவி ஈஸ்வரி.இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பெருந்துறையில் உள்ள அவருடைய உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.அதன் பிறகு அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.இவர் பெத்தாம்பாளையம் ரோடு பிரிவு பைபாஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில் அதிவேகத்தில் கார் ஓன்று வந்து கொண்டிருந்தது.

அந்த காரானது ஈஸ்வரி சென்று கொண்டிருந்த மோட்டர்சைக்களின் மீது மோதியது.அதில் அவர் மோட்டர்சைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.அவருக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version