Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரபரப்பு தகவல்: கோவிலுக்குச் சென்று 2 பேர் மரணம்! 4 பேர் மாயம்!

பரபரப்பு தகவல்: கோவிலுக்குச் சென்று 2 பேர் மரணம்! 4 பேர் மாயம்!

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் ராஜ், பிரவீன் ராஜ், தாவீது ஈசாக், தெர்மஸ் உள்பட 40க்கு மேற்பட்டோர் தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்துள்ளனர். இரவில் அங்கேயே தங்கி தரிசனம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சார்லஸ், பிரித்திவிராஜ், பிரவீன்ராஜ் உட்பட ஆறு பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். திடீரென தண்ணீரை வேகம் அதிகரித்ததால் அவர்கள் ஆறு பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சார்லஸ் பிரித்திவிராஜ் ஆகிய இரண்டு பேர் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரவீன் ராஜ், தாவீது, ஈசாக் தெர்மஸ் ஆகிய 4 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version