Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு – கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் உறுப்புகள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றும் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

தற்போது அமைச்சர் தீவிர சிகிச்சையில் இருக்கின்ற நிலையில், நெல்லையைச் சேர்ந்த தால் சரவணன் என்பவர், அவரின் முகநூல் பக்கத்தில், “வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்”. 

தற்போது அந்த போஸ்டர் வைரலாகி  வருகிறது. அது மட்டுமன்றி தால் சரவணன் என்ற அதிமுக பிரமுகர் பதிவிட்ட அந்த  போஸ்டரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் பதிவிட்ட சில மணிநேரத்திலேயே நீக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version