Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து 67 கிலோவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அரவக்குறிச்சி எம் எல் ஏ செந்தில் பாலாஜி.

திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இரு எம்.எல்.ஏக்களின் மறைவு மற்றும் கழக பொதுச் செயலாளர் க அன்பழகனின் உடல்நிலை ஆகியவற்றால் சோகத்தில் இருக்கும் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ளார்.

ஆனாலும் இணைய உடன்பிறப்புகள் சமூகவலைதளங்களில் ஸ்டாலினின் பிறந்தநாளை ஆசையாக கொண்டாட திமுக எதிர்ப்பாளர்கள் #ஹேப்பிபர்த்டேஇலவுகாத்தகிளி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்ரண்ட் செய்து அவரைக் கேலி செய்து வருகின்றனர். ஆனால் திமுகவினர் சளைக்காமல் பிறந்த்நாள் கொண்டாட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற எம். எல்.ஏ செந்தில் பாலாஜி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 67 கிலோ கேக் வாங்கி வெட்டியுள்ளார். மேலும் கரூர் பகுதியில் பல நலத்திட்ட உதவிகளையும் அவர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. ஸ்டாலினிடம் நல்ல பெயர் வாங்கவேண்டுமென்று அவர் செய்யும் இந்த விஷயம் ஆண்டாண்டு காலமாக திமுகவில் இருப்பவர்களுக்கே பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version