நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட திமுக அமைச்சர் மற்றும் பாஜக கட்சி தலைவர்!
அரசியல் சுற்று வட்டாரங்களில் இரு தலைகளின் பேச்சு தான் பேசும் பொருளாகவே உள்ளது. திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜியும் ,பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் செந்தில் பாலாஜி அண்ணாமலை மீது சாட்டிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல சர்ச்சைகள் கிளம்பி உள்ளது. அந்த வகையில் அண்ணாமலை கோவையில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கந்த சஷ்டி கவசம் பாடி மக்களுக்காக பூஜை செய்தார்.
இதனை பல கட்சிகளும் கேலி கிண்டல் செய்து வந்தனர். யாராவது ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கந்த சஷ்டி கவசம் பாடுவார்களா என கூறி வந்தனர். அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி இது பற்றி பேட்டியளித்தார், அவர் கூறுகையில், சிவன் கோவிலுக்கு சென்று கந்த சஷ்டி கவசம் படிப்பதை இப்பொழுதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். நீங்கள் யாராவது இதை போல் பார்த்து இருப்பீர்களா? இது போன்ற ஒரு கோமாளித்தனம் வேறு யாராலும் செய்ய முடியாது.
மேலும் அங்கிருந்த பத்திரிக்கை நிருபர் இவரிடம் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, என்னிடம் கோமாளிகளை குறித்து எந்த கேள்வியையும் கேட்க வேண்டாம், என அண்ணாமலையை கோமாளி என்று விமர்சனம் செய்தார். வேர்ல்டு நம்பர் ஒன் கரகாட்ட கோஸ்ட்டி என்றால் அண்ணாமலை தான் என்று கூறினார். முதலமைச்சர் மக்களுக்கு கூறும் விரைவு செய்திகளுக்கு பதிலாக தற்பொழுது எல்லாம் கோமாளிகளின் செய்தி தான் முன் வருகிறது என்று கேலி செய்தார்.
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பாஜக அண்ணாமலை ஓர் பிரஸ்மீட்டில் கூறியது போல், சாராய வியாபாரி, ஊழல் பேர்வழி, ஆள்கடத்தல் பேர்வழி அவரெல்லாம் தற்பொழுது விமர்சனம் செய்ய வந்து விட்டனர். முன்பு எதிர்க்கட்சியில் இருந்த பொழுது தற்பொழுது இருக்கும் ஆளுங்கட்சி தலைவரை கழுவி கழுவி ஊற்றிவிட்டு தற்பொழுது வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் அங்கேயே சரணடைந்துள்ளார்.
இவ்வாறு சுயமரியாதை அற்றவர் எல்லாம், ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் முன்பு கந்தசஷ்டி பாடியதை விமர்சனம் செய்ய வந்து விட்டனர். இதை வைத்து பார்க்கையில் யார் கோமாளி? முருகன் சந்நிதி முன்பு கந்த சஷ்டி பாடியவர் கோமாளியா அல்லது சுயமரியாதை அடகு வைத்து தலைவராக ஏற்ற செந்தில் பாலாஜி கோமாளியா என வினாவியுள்ளார்.