தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தொகுதியின் திமுகவின் உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அதிக நேரம் செலவழிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இவருடைய வீட்டிற்க்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இவருடைய ஐடியை குறிப்பிட்டு தொடர்பு கொண்டால் போதும் உடனே அதற்கான பதிலை தெரிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பாராம்.
அதனாலேயே திமுக ஏதேனும் ஒரு மக்கள் விரோத செயலை செய்துவிட்டால் அந்த சமயத்தில் இவருடைய ஐடியை குறிப்பிட்டு நெட்டிசன்கள் எழும்புவது உண்டு. அதேபோல ஒருசில நெட்டிசன்கள் அளவுக்கு அதிகமாக விமர்சனம் செய்தோ அல்லது கேள்விகளை கேட்டு இவரை அவ்வப்போது கோபப்படுத்திவிடுவார்கள். அதோடு கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது என்பதை மறந்து இவரும் ஆங்காங்கே கோபப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல நேற்று முன்தினம் ஒரு இணையதள பயன்பாட்டாளர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி தொடர்பாக ஒரு விமர்சனத்தை வைத்திருந்தார். உடனே இதை பார்த்து கோபமடைந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அதனை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் அளித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது
இதனைத் தொடர்ந்து வலைதள பக்கத்தில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஒருசில வலைதள வாசிகள் செந்தில்குமாரின் ஐடியையும் குறிப்பிட்டு நேற்று இரவு முதலே #கூலரும்_கூத்தியாளும் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதேபோல இவரும் எல்லா கருத்திருக்கும் பதில் தெரிவித்து வருகின்றார். இவர் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்துவிட்டு காலை முதல் அனைத்து விதமான கருத்துக்களுக்கும் மறு கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.