சினிமா கதையை திருடுவது போல நாட்டுபுறப்பாடலை திருடியதாக செந்தில் ராஜலட்சுமி தம்பதி மீது குற்றசாட்டு
நாட்டுபுறப்பாடகியான மதுரமல்லி என்பவர் இயற்றி பாடிய நாட்டுபுறப்பாடலை சமூக வலைத்தளமான யூடியூப்பில் ஏறக்குறைய 2 கோடி மேல் பார்க்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்த நாட்டுப்புற பாடலைத் திருடி சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினர் கோவில் திருவிழாக்களில் பாடியயுள்ளனர்.மேலும் அந்த பாடலை தங்கள் தோழி இயற்றியதாகக் கூறி பொய்யான பரப்புரையிலும் அவர்கள் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
நாட்டுப்புற பாடல்களை உணர்வு பூர்வமான முறையில் பாடி பின்னர் தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலமாக பிரபலமான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி தம்பதியினர் மீது தான் இந்த குற்றச்சாட்டானது எழுந்துள்ளது.
மதுரமல்லி என்ற புனைப் பெயரில் பாடல்களை இயற்றி பாடிவரும் டாக்டர் கலைச்செல்வியின் “மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது” என்ற பாடலானது வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த பாடலானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலெட்சுமியின் கிராமிய பாடல்களை விஞ்சும் அளவிற்கு யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவில் நடத்தப்பட்ட மேடைக்கச்சேரியில் பங்கேற்ற ராஜலெட்சுமி, “மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது” என்ற பாடலை தனது தங்கை என்று கூட்டத்தினரால் அழைக்கப்படும் கலைவாணி என்பவர் இயற்றி பாடியதாக பேசியது தான் சர்ச்சையை கிளப்பியதாக கூறப்படுகிறது.
பிரபலமான அந்த அந்தபாடலை இயற்றி பாடியது யார் என்ற ஆதரமாக யூடியூப்பில் இன்றளவும் அந்த பாடலானது ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், ராஜலட்சுமி யாரோ ஒரு பெண்ணை வைத்து அந்த பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவது கீழ்த்தரமானது என்று கிராமியப் பாடகி மதுர மல்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தான் இயற்றி பாடிய பாடலை வேறு ஒருவர் இயற்றியதாக கூறிய ராஜலட்சுமி தன்னுடைய தவறான கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிற அளவுக்கு பாடகி மதுர மல்லி மன உளைச்சலுடன் வீடியோ வெளியிடும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.
சாதாரண நிலையிலிருந்து செந்தில் ராஜலெட்சுமி தம்பதியினர் பாடும் நாட்டுப்புற பாடல்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவால் இவர்கள் தற்போது சமுதாயத்தில் நல்ல புகழை அடைந்துள்ளனர்.இவ்வாறு புகழின் உச்சியிலுள்ள இவர்கள் பாடலை திருடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிராமிய பாடகி மதுர மல்லி காவல்துறையில் புகார் அளித்து விட்டு கண்ணீர் மல்க காத்திருக்கிறார்.
சினிமாவில் தான் அடிக்கடி கதை திருடர்கள் தொல்லை நடந்து வருகிறது என்றால் இந்த சம்பவத்தின் மூலம் நாட்டுப்புற பாடல்களிலும் கவிதை திருட்டு நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் தன் மீதான புகாரை முற்றிலும் மறுத்துள்ள நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.