பெண்களுக்கான தனி ரேஷன் கார்டு திட்டம்! உடனடியாக பெறுவது எப்படி?

0
217
Attention Family Cardholders! Here is the important information of the government!

பெண்களுக்கான தனி ரேஷன் கார்டு திட்டம்! உடனடியாக பெறுவது எப்படி?

திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை பெண்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதாவது கணவனால் கைவிடப்பட்ட மற்றும் தனியாக வசிக்கும் பெண்களுக்கு எந்த ஒருவித ஆவணமும் இன்றி புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தற்பொழுது  கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்கள் பெருமளவு பயனடைவர். அவ்வாறு புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

முதலில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு  முன்னதாகவே குடும்ப அட்டை இருந்தால் அதிலிருந்து தங்களது பெயரை நீக்கம் முதலில் செய்ய வேண்டும். அதனையடுத்து பெயர் நீக்கம் செய்வதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ்களை ஆய்வு செய்து பிறகு புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கான நடைமுறைகள் நடக்கும். அதேபோல கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மணவாழ்வு முடிவுற்ற பெண்களும் தங்கள் வைத்திருந்த பழைய குடும்ப அட்டையிலிருந்து தங்கள் பெயரை நீக்குவதற்கு அவர்களது கணவன்மார்கள் முன்வருவதில்லை.

மேற்கொண்டு அவர்கள் விவாகரத்து பெற்று இருந்தால் அதற்கான சான்றிதழ்கள் காட்டினாலும் அது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதனால் தற்பொழுது இது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஆவணங்களின்றி புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பெண்களின் உறவுநிலை பாதுகாக்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும் இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்  அலுவலர்களுக்கு இதுகுறித்து அறிவுரை  வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி தனியாக வசிக்கும் பெண் மற்றும் அவர் சார்ந்துள்ள குழந்தைகளின் ஆதார் எண் ஆகியவை கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தணிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பாக அத்துறை  அலுவலர் ,கைவிடப்பட்ட பெண்களிடம் எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று கொள்ள வேண்டும்.அதனையடுத்து  அந்த அலுவலர்களின்  அதிகாரத்தின் அடிப்படையில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அவர்களது பழைய குடும்ப அட்டையிலிருந்த பெயர்களை நீக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நீதிமன்ற விவகாரத்து சான்று கொடுத்து தான்  ஆகவேண்டும் போன்றவற்றை உத்தர விடாமல் புதிய குடும்ப அட்டை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இம்முறைகள் மூலம் தனி நபர் குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.