Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…

 

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…

 

ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியான தேசியக் கொடியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று ஏற்றி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சுதந்திரதின உரையாற்றினார்.

 

பின்னர் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “சென்னை போன்ற பெருநகரங்கள் தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாம் இன்று காணக்கூடிய காட்சி ஒன்று இருக்கின்றது. அது ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களை சார்ந்த ஊழியர்கள் நேரத்தை பார்க்காமல் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பணி புரிந்து வருவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய பணியாளர்களின் ஒட்டுமொத்த நலன்களை காக்கும் வகையில் அவர்களுக்கு என்று தனியாக நல வாரியம் அமைக்கப்படும் என்று நான் இன்று(ஆகஸ்ட்15) அறிவிக்கின்றேன்” என்று கூறினார்.

 

Exit mobile version