Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! 

Separated Vikram Lander!! Chandrayaan-3 Victory Journey!!

Separated Vikram Lander!! Chandrayaan-3 Victory Journey!!

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!!

சந்திரயான் – 3 தனது சுற்றுபயணத்தை கடந்து தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நிலவின் தென்துருவ பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்-3 எம் 4 என்ற ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-3 என்ற விண்கலத்தினை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

சந்திரயான்-3 தனது 40 நாள் பயணத்தை படிப்படியாக வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது அது நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சென்றுள்ளது. அந்த விண்கலம் புவியின் சுற்றுவட்ட பாதையை கடந்து இறுதியில் நிலவின் சுற்றுவட்ட பாதையின் இறுதியை தற்போது எட்டி உள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் படிநிலைகளை விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி தற்போது அந்த விண்கலம் 100கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவின் அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதால் வருகின்ற 23-ஆம் தேதி திட்டமிட்டப்படி மாலை 5. 47மணி அளவில் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் தரையிறங்க உள்ளது.

அதனுடைய பயணம் வெற்றிகரமாக சென்றுகொண்டுள்ள சூழலில் விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக  வெற்றிகரமாக பிரிந்து விட்டதாக இஸ்ரோ தற்போது செய்தி தெரிவித்து உள்ளது. விண்கலத்தில் இருந்து பிரிந்த உந்துவிசை கலன் மற்றும் லேன்டர் இரண்டும் நிலவின் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இதையடுத்து லேண்டரின் உயரமானது நாளை மாலை சுமார் 4 மணி அளவில் குறைக்கப்பட உள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.  நிலவு சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் பயணம் செய்வதை ஐரோப்பிய விண்வெளிமையம், மற்றும் இஸ்ரோ ஆகிய இரண்டும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

Exit mobile version