Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!?

#image_title

செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி ரசிகர் அனைவரும் நடிகர் விஜய் அவர்கள் இந்த முறை என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கீதம் வாசுதேவ் மேனன், சான்டி, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லியோ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் அவர்கள் லியோ திரைப்படத்தை தயாரித்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. தற்பொழுது லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த பேச்சு இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது அதே தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இசை வெளியீட்டு விழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக் கதை கூறுவார். மேலும் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்துவார். அந்த வகையில் லியோ இசை வெளியீட்டு விழாவில் என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version