Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

கொரோனா லாக் டவுனில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்ட நிலையில் சீரியலுக்காக சூட்டிங் ஆரம்பித்துள்ளது.

வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட நடிகை, நடிகர்கள், சென்னை திரும்ப முடியாத நிலையில் அவர்களுடைய ரோலில் வேறு நபர்களை வைத்து சூட்டிங் எடுக்க, சின்னத்திரை முடிவு செய்துவிட்டது.

இதனால் பல பிரபல சீரியல்களின் கதாநாயகிகள் மாற்றப்பட்டனர். அந்த வரிசையில் ஜீ தொலைக்காட்சியின் “இரட்டை ரோஜா” தொடரில் ஷிவானிக்கு பதிலாக, சாந்தினி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

இது குறித்து சாந்தினி கூறியதாவது:                                                                       இது எனக்கு கிடைத்த இரண்டாவது தொடர். சில மாதங்களுக்கு முன்பு “தாழம்பூ” என்ற தொடரில் நடித்து வந்தேன். அது எதிர்பார்த்த வரவேற்பு தரவில்லை.அந்த வருத்தத்தில் இருந்த என்னை இன்று தொடர் சரி செய்து விடும் என நம்புகிறேன். 

ஏனென்றால் பொதுவாக சீரியல்களில் இரண்டு கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்காது. அதுவும் பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டு ரோல்களும் கிடைக்கும்போது நடித்தால் நல்ல “ஸ்கோப்” இருக்கும் என்பதால் சம்மதித்துவிட்டேன். அதுமட்டுமல்ல இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த ஜாக்பாட் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version