மன அழுத்தத்தால் ஏற்படும் தொடர் தற்கொலைகள்!! STRESS-யை குறைக்க என்னெல்லாம் செய்யலாம்?
மனிதனுக்கு மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம்.நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென்றால் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மன அழுத்தம் ஏற்பட்டால் அவை மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தும்.
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் அதை பாலோ செய்வது மிகவும் கடினம்.வேலைப்பளு,குடும்ப உறவுகள்,காதல்,நண்பர்கள்,மூன்றாவது நபர்கள்,உடல் நலக் கோளாறு என்று மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.மன அழுத்தம் தொடர்ந்தால் அவை மனக் கவலை,மனச் சோர்வை ஏற்படுத்தி இறுதியாக தற்கொலைக்கு தூண்டிவிடும்.
இன்றைய தலைமுறைக்கு பக்குவம்,புரிதல்,பொறுமை,அனுசரித்து போதல் போன்ற எந்தஒரு பழக்கமும் இல்லை.இதனாலே சிறு விசயத்திற்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
முதலில் மனதில் தேவையற்ற எண்ணங்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.தங்களுக்கு பிடித்த நல்ல எண்ணங்களை மனதிற்குள் புகுத்த முயலுங்கள்.
மன அழுத்தத்தை குறைக்க கூடிய நிகழ்வுகளை செய்யத் தொடங்குங்கள்.பாடல் கேட்பது,செல்ல பிராணிகள் வளர்ப்பது,புத்தகம் படிப்பது,எழுதுவது,குழந்தைகளுடன் நேரம் கழிப்பது போன்ற செயல்களை செய்தால் மன அழுத்தம் குறையும்.
தங்கள் மனதிற்குள் தாங்க முடியாத வலி இருந்தால் அதை நம்பகமான உறவிடம் சொல்லுங்கள்.அல்லது ஒரு தாளில் எழுதுங்கள்.மனதில் உள்ள அனைத்தையும் எழுதுவதால் வலிகள் குறையும்.
கண்ணீர் விட்டு அழுவதால் சிலருக்கு மன அழுத்தம் குறையும்.இதனால் கண்களுக்கும், மனதிற்கும் நல்லது.
தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்.இதனால் மனதில் அமைதி உண்டாகும்.தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வாருங்கள்.இதனால் மன அழுத்தம் குறையும்.
மன அழுத்தம் ஏற்பட்டால் தற்கொலை உணர்வு மனதிற்குள் ஏற்படக் கூடாது.5 நிமிடங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து மனதை நிதானப்படுத்தினாலே மன அழுத்தம் குறையும்.