SERUPPADAI: தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செருப்படை மூலிகையின் மகத்துவம் தெரியுமா?

0
371
SERUPPADAI: Do you know the magnificence of this red herb lying on the ground?

SERUPPADAI: தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செருப்படை மூலிகையின் மகத்துவம் தெரியுமா?

நம் மண்ணில் பெயர் தெரியாத பல வகை மூலிகைகள் இருக்கிறது.அதில் ஒன்று செருப்படை மூலிகை.இதில் சிறு செருப்படை,பெருஞ் செருப்படை என்று இரு வகைகள் இருக்கிறது.இந்த செருப்படை தாவரம் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவை.தோல் தொடர்பான பாதிப்பு,பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

செருப்படை மூலிகை செடியின் மருத்துவ பயன்கள்:

1)வெள்ளைப்படுதல்

செருப்படை மூலிகை 20 கிராம் அளவிற்கு எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் நீரில் சேர்த்து சுண்டக் காய்ச்சி குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

2)சிறுநீரக தொற்று

செருப்படை மூலிகை இலையை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக தொற்று முழுமையாக குணமாகும்.

3)சிரங்கு

10 மில்லி செருப்படை சாறு மற்றும் 10 மில்லி வெள்ளை வெங்காய சாற்றை ஒரு கிளாஸ் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிரங்கு குணமாகும்.

4)நாவறட்சி

ஒரு கப் நீரில் மிளகு,திப்பிலி,செருப்படை போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நாவறட்சி சரியாகும்.

5)விக்கல்

ஒரு கிளாஸ் அளவு நீரில் செருப்படை சாறு 25 மில்லி கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் விக்கல் பிரச்சனை சரியாகும்.

6)கல்லீரல் புற்றுநோய்

செருப்படை இலையை அரைத்து நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கல்லீரல் புற்றுநோய் முழுமையாக குணமாகும்.

7)சரும பிரச்சனை

செருப்படை இலையை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சரும பிரச்சனை அனைத்தும் சரியாகும்.