Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

மூட்டு வலியால் பலபேர் தினம் தினம் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எங்கேயும் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்து இருந்தால் உட்கார முடியாமல் சிரமப்படுகின்றனர். படிக்கட்டுகள் ஏற முடியாமல் கை கால் வலிகளில் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மூட்டு வலி சரியாவதற்கு அருமையான ஒரு மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரண்டை
பூண்டு
நெய்
முருங்கைக் கீரை
உப்பு

செய்முறை:
இதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது பிரண்டை பிரண்டை கிடைக்கவில்லை எனில் பிரண்டை பொடி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பிரண்டையில் பிஞ்சு பிரண்டை கிடைத்தால் அது மிகவும் நல்லது. இந்த பிரண்டையில் மூன்று பிரண்டைகளை மட்டும் சிறிய சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் மூன்று பல் பூண்டை சேர்த்து நன்றாக உரலில் தட்டிக் கொள்ளவும். இந்தப் பிரண்டையையும் பூண்டையும் நன்றாக தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை அல்லது மண்சட்டியை வைத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு நெய்யை ஊற்றிக் கொள்ளவும்.

இதனுடன் நாம் தட்டி வைத்திருக்கக்கூடிய பிரண்டை மற்றும் பூண்டு கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கி விடவும். இவ்வாறு செய்த இதை ஒரு வாரத்திற்கு காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட முடியாதவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இதை சாப்பிடலாம் அல்லது மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு இதை சாப்பிட்டு வரலாம்.

இவ்வாறு இதை தொடர்ந்து சாப்பிட்டு வர மூட்டு வலி பிரச்சனை நிரந்தரமாக குணமடையும். இது சேர்த்திருக்க கூடிய அத்தனை பொருட்களும் மூட்டு வலியை குணமாக்குவதோடு மட்டுமல்லாமல் நம் உடம்பில் கால்சியம் சத்துக்களையும் அதிகரிக்கும். கை கால் வலி மூட்டு வலி பாத வலி குடைச்சல் என அனைத்து விதமான பிரச்சனைகளையும் இது சரி செய்யும்.

மேலும் உடம்பில் வாயு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தாலும் இது நீக்கிவிடும். இது நன்றாக பசியை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல் செரிமான கோளாறு என அனைத்தையும் சரி செய்யும். ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து நரம்பில் இருக்கக்கூடிய அடைப்புகளையும் இது நீக்கும்.

Exit mobile version