Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

Sexual assault on a woman who went to take a scan! Shame on the government hospital!

Sexual assault on a woman who went to take a scan! Shame on the government hospital!

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

மதுரையில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தெரிவித்துள்ளனர்.

மறுநாள் மீண்டும் அதே பரிசோதனைக்காக அந்த பெண் வந்தபோதும் மீண்டும் அந்த மருத்துவர் அந்த பெண்ணிடம் அதே செயலை செய்துள்ளார். அதன் காரணமாக அந்த இளம்பெண் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்துள்ளார். எனவே இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையில் டீன் ரத்னவேல் மற்றும் ரேடியாலஜி துறைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரிக்க மருத்துவமனையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகும் பட்சத்தில் மருத்துவ துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்கேன் பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை பணி இடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை டீன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனைக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த பாலியல் தொல்லை விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ள அனைவருக்குமே இது மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version