Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!!

#image_title

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!!

விமானத்தில் பயணம் செய்யும் பொழுது கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அடுத்து அந்த நடிகை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையாக இருக்கும் திவ்யா பிரபா அவர்கள் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான லோக்பால் என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சிம், மும்பை போலீஸ், கோல்ட் ஸ்டோரேஜ் டேக்காப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை திவ்யா பிரபா அவர்கள் தமிழில் கயல் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். குடியில் ஒருவன் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் விமான பயணத்தின் பொழுது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை திவ்யா பிரபா அவர்கள் சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து நடிகை திவ்யா பிரபா அவர்கள் சமூக வலைதளத்தில் “சில நாட்களுக்கு முன்பு நான் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அப்பொழுது எனது அருகே இருந்த பயணி ஒருவர் குடி பாதையில் இருந்தார். அவர் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கெடுத்தார்.

இது தொடர்பா விமானத்தில் இருக்கும் பணிப் பெண்களிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் நான் தெரிந்து இது குறித்து அவர்களிடம் புகார். அளித்ததால் என்னுடைய இருக்கையை மாற்றி விட்டு மட்டும் சென்றனர். கொச்சி விமான நிலையத்திற்கு வந்தவுடனே தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து நான் விமான அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். மேலும் ஆன்லைன் மூலமாக கேரளா காவல் துறையினருக்கும் புகார் அளித்தேன்.

இந்த மாதிரியான விஷயத்தில் பயணிகளின். பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளி மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை அளிக்க வேண்டும். நான் புகார் செய்தும் விமான நிலைய ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் என்க்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version