Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார் இவர் உடுமலை அருகே கரட்டுமடத்தில் இருக்கின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். இதுபோன்று தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி மாணவியிடம் ஆசிரியர் பழகி வந்திருக்கிறார் இதனை அந்த மாணவியின் சகோதரி கண்டுபிடித்து தன்னுடைய உறவினரிடம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையைச் சார்ந்தவர்கள் ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கிறார்கள், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

என்னதான் பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் அந்த தவறுகள் குறைவதாக தெரியவில்லை. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன? என்று பொதுமக்கள் அனைவரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

ஆயிரம் சட்டங்களை கொண்டு வந்தாலும் கூட தவறுகள் நடைபெறுவது குறையவில்லையே என்று ஒரு சிலர் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக மத்திய, மாநில, அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும், சொல்லப்படுகிறது.

Exit mobile version