Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

அரக்கோணத்தை அடுத்துள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் ஒரு அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகன், இவர் இந்த பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார்.

அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடர்பாக அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து அழுது இருக்கிறார்.

மாணவி சொன்னதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் ஆசிரியர் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தன் மீது வழக்கு பதிவு செய்து கொண்ட காவல் துறையினர் தேடி வருவதை நண்பர்கள் மூலமாக அறிந்து கொண்ட ஆசிரியர் முருகன், திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிப்பதற்காக காவல்துறை சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Exit mobile version