கடந்த சில நாட்களாகவே, பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. பாலியல் குற்றத்திற்கு உள்ளானவர்கள் உடனே கைது செய்யப்பட்டாலும், பின்னர் பல்வேறு காரணங்களால் வெளிவந்து விடுகின்றனர். இதனால் குற்றங்கள் குறைந்தபாடே இல்லை. இந்நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரின் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த காரணத்தினால் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு,
பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றத்தில் ஈடுபட்டவர் 14 ஆண்டு முதல் இயற்கை மரணம் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இந்த குற்றத்தை புரிவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். பெண்களுக்கு துக்கத்தை விளைவிக்கும் நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. வன்கொடுமை குற்றங்களில் மரணிக்கும் வரை சிறை. குற்றமிழைத்தவர் எவராயினும்( கட்சித் தொண்டர்கள், உறவினர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ) ஆயுளுக்கும் சிறை. 12 வயசுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தாலும், கூட்டு பலாத்காரம் செய்தாலும், மரணத்தை விளைவிக்கும் படி காயப்படுத்தி இருந்தாலும் ஆயுளுக்கும் சிறை. அது மட்டுமில்லாமல், பெண்களை பின்தொடர்ந்து வந்தாலே ஐந்து ஆண்டுகளுக்கு சிறை தண்டனை என வலியுறுத்தியுள்ளார். மேலும் பெண் மீது அமிலம் வீச முயற்சிக்கும் நபர்களுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அமிலம் வீசி அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டிருந்தாலும் ஆயுள் தண்டனை. மேலும், சிறைக்கு செல்லும் கைதிகள் அப்பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் மூன்று முதல் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிக்கைகளுடன் கூடிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.