Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! 

#image_title

ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி அனாதை ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஹனீதீன் என்பவர் தனது உறவினரான ஜாபருல்லா என்பவரை அங்கு சேர்த்த நிலையில் அவர் மாயமானதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் பேரில்

அரசு அதிகாரிகள், போலீசார் அங்கு நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வந்ததும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியதோடு, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், ஆசிரமத்தில் இருந்த 16 பேர் மாயமாகியிருப்பதும், அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்துள்ளது.

இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்ளிட்ட 203 பேர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் 99 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்ட நிலையில் 44 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 60 பேர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வளத்தி, கடலூர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமம் எவ்வித அனுமதியும் இன்றி 18 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆசிரமம் தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசிரமத்தில் உள்ளே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவது இல்லாத காரியம் என்று தெரிகிறது.

இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மனநலம் குன்றிய பெண்களை மிரட்டியோ அல்லது மயக்கப்படுத்தியோ பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதை அங்கே சமையல்கார பெண்ணாக வேலை செய்த கொல்கத்தாவை சார்ந்த ஒருவர் புகார் தெரிவித்ததின் பெயரில் தெரியவந்துள்ளது.

மேலும் 50 பேர் ஜூபின் பேபியின் நண்பர் நடத்தி வரும் பெங்களூர் ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 16 பேர் மாயமாகியுள்ளனர். இதை அடுத்து 5 போலீசார் கொண்ட தனிப்படையினர் விழுப்புரத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். அங்கு பெங்களூரில் உள்ள தோட்ட குப்பியில் ஆசிரமத்தில் விசாரணை மற்றும் ஆய்வு செய்தனர்.

இதில் ஜுபின் பேபி உண்மையில் 50 பேரை குண்டல புலியூரில் இருந்து அழைத்துச் சென்றார்? அதில் 16 பேர் மாயமானார்களா? அவர்களின் தற்போதைய கதி என்ன? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version