Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா?

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா?

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் இயக்குனர் அட்லி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ‘ஜவான்’ படத்தில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில், படக்குழு, சென்னையில் முகாமிட்டுள்ளது அட்லி படக்குழு. இந்த படத்தில் விஜய் இரண்டு நாள் மட்டும் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த காட்சிகள் செப்டம்பர் மாதத்தில் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மும்பையில் நடந்த படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. மும்பையில் இப்போது பெருமழை பெய்து வருவதால் சென்னைக்கு மாற்றியுள்ளனராம் படக்குழுவினர். மேலும் படத்தில் பணியாற்றும் பெரும்பாலான கலைஞர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் பிரம்மாண்டமான சிறை செட் ஒன்றை அமைத்து அட்லி படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை ஷுட் செய்து வருகிறதாம் படக்குழு. இந்த ஷூட்டிங்குக்காக மும்பையில் இருந்து சுமார் 400 கலைஞர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்களாம். இந்த படத்தில் ஷாருக் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஷாருக்கானின் மனைவியாக தீபிகாவும், இன்னொரு கதாபாத்திரத்தின் காதல் ஜோடியாக நயன்தாராவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version