அக்ஷய் குமாரின் சாதனையை முறியடித்த ஷாருக்கான்!! அடுத்து இது தான் நடக்கும்!!

0
98
#image_title

அக்ஷய் குமாரின் சாதனையை முறியடித்த ஷாருக்கான்!! அடுத்து இது தான் நடக்கும்!!

தமிழில் தெறி,மெர்சல் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜவான்’.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜவான் வெளியான நாள் முதல் இன்று வரை 600 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் ஜவான் பல ரெக்கார்டுகளை முறியடிக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாரின் சாதனையை ஷாரூக்கான்,ஜவான் படத்தின் மூலம் முறியடித்துள்ளார்.அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு அக்‌ஷய் குமாரின் நடிப்பில் ஹவுஸ்புல் 4,மிஷன் மங்கல்,குட் நியூஸ்,கேசரி ஆகிய 4 படங்கள் வெளிவந்தன.

இந்தியாவில் மட்டும் இந்த நன்கு படங்களின் மொத்த வசூல் ரூ. 775 கோடி ஆகும்.இவரின் சாதனையை தற்பொழுது தனது 2 படங்கள் மூலம் ஷாரூக்கான் முறியடித்துள்ளார்.ஜவான் படத்திற்கு முன்னதாக இந்த ஆண்டில் வெளியான ‘பதான்’ படம் இந்தியாவில் மட்டும் ரூ.544 கோடி வசூலித்தது.அதனை தொடர்ந்து வெளியான ‘ஜவான்’ படம் தற்பொழுது ரூ.316 கோடி வரை வசூலித்து இருக்கிறது.இந்த இரண்டு படங்களின் வசூல் ரூ.850 கோடிக்கும் மேல் இருக்கிறது.

மேலும் பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்த நிலையில் ஜவான் படமும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்பதால் படக்குழுவினரும், ஷாரூக்கான் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.