Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை!

#image_title

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை!

தமிழில் தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நாயகனாக வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.இவரை தவிர்த்து விஜய் சேதுபதி,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் தத் நடித்து இருக்கின்றனர்.இப்படம் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கின்றது.

வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் படம் திரைக்கு வர இருக்கின்ற நிலையில் படம் வெற்றி பெற வேண்டுமென்று நடிகர் ஷாருக்கான்,அவரது மகள் சுஹானா மற்றும் படத்தின் கதாநாயகி நயன்தாரா,அவரது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சென்னையில் நடைபெற்ற ஜவான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை நயன்தாரா வராமல் இருந்ததால் அது சர்ச்சையாக பேசப்பட்டது.இந்நிலையில் தற்பொழுது ஷாருக்கானுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் இருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

Exit mobile version