போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகித்து விருந்து. நடத்தி ரவந்துள்ளார். அந்த தனிசொகுசு கப்பலை திடீரென்று போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தற்பொழுது வரை விசாரணை செய்து வருகின்றனர்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவை போட்டது.
நீதிமன்ற காவலில் வைக்காமல் தனக்கு ஜாமின் அளிக்குமாறும் ஆர்யன்கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு விசாரணையானது நடைபெற்று ஷாருக்கான் மகன் ஆர்யகானுக்கு இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து ஷாருக்கான் மகன் ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 18 பேருக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக சிறை நிர்வாகம் அறிவிப்பு ஒன்று தெரிவித்தது. ஆரிய கானின் வழக்கறிஞர் ஷாருக்கான் மகன் ஆர்யனிடம் எந்த ஒரு போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை இது திட்டமிட்டு அவர் மீது போடப்பட்ட வழக்கு என்றும் கூறினார். அதனால் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் இவர் கூறியதை என்பிசி கடுமையாக கண்டித்தது. அதற்கு அவர்கள் எதிராக கூறியது, ஷாருக்கான் மகன் உட்பட 18 பேர் போதை தடுப்பு பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ளவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்பொழுது ஜாமீன் வழங்கினால் மேற்கொண்டு விசாரணை நடத்துவதில் பல சிக்கல்கள் உண்டாகும். அதனால் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது என இவ்வாறு கூறினர்.