Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னை சிகரெட் அடிக்காதுன்னு சொன்ன விசித்ரா- ஷகிலா பேட்டி

#image_title

பிக் பாஸ் 7 தமிழில் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் ஒரு புறம் அவ்வளவு பெரிய டாஸ்க் கொடுப்பதில்லை. எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லோரிடமும் உள்ள வன்மம் தான் வெளியே தெரிகிறது. சண்டை  மட்டும் தானே தவிர அவ்வளவு பெரிய ரிஸ்கான டாஸ்க் எதுவும் அதில் தருவதில்லை என்று சொல்லப்படுகிறது.

 

பேட்டி ஒன்றில் ஷகிலா அவர்கள் விசித்ராவை பற்றி கூறியது மாபெரும் பிரச்சனையாக வெடித்து இருந்தது. வனிதா மற்றும் ஜோதிகா அவர்களுக்கு ஆதரவு அளித்து ஷகிலா பேசிய பேட்டியில் அதில் மக்கள் நெட்டிசன்கள் ஷகிலாவை திட்டியது குறித்து கேட்கப்பட்டது.

 

அதற்கு சகிலா எனக்கு விசித்ரா மிகவும் தெரியும். நான் தெலுங்கு பிக்பாஸுக்கு செல்லும் பொழுது என்னிடம் அவர் கூறியது தயவுசெய்து சிகரெட் அடிக்காதே  அடிக்காதே என்று கூறி தான் என்னை அனுப்பினார்.

 

அதன் பிறகு எனது மகளுக்கு போன் செய்து நான் எவ்வளவோ அவளிடம் சொல்லி அனுப்பினேன் அங்கு சென்று சீக்ரெட் அடிக்காதே என்று ஆனால் பார் அதை எப்படி போட்டு காட்டுகிறார்கள் என்று என் மகளிடம் தெரிவித்துள்ளார்.

 

அவருக்கு அவ்வளவு என்மீது அக்கறை இருக்கிறது. அதேபோல் எனக்கும் அவர் மீது அக்கறை இருக்கிறது. வெளியே வந்த பின் ஏன் இதை செய்தீர்கள் என்று கேட்கும் தைரியமும் அந்த ரைட்ஸ் எனக்கு இருக்கிறது என்று ஷகீலா பதில் அளித்துள்ளார்.

 

மேலும் ஒரு நடிகரைப் பற்றி அவர் கூறியது நமக்கு தேவையில்லாத ஒன்று. அவர்கள் பெரிய இடம் இப்பொழுது அவரைப் பற்றி கூறி தனது குடும்பத்திற்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது ,?. இப்பொழுது வனிதாவிற்கு ஆகவில்லை. ஏதோ முகம் தெரியாத ஒரு நபர் அவரது கன்னத்தில் குத்தி விட்டு செல்லவில்லையா? அதுபோல் யாருக்கு என்ன தெரியும் என்ன நடக்கும் என்று அதனால் தான் அதை அதை அப்பொழுதே கூறவேண்டும் இப்பொழுது கூறும் பொழுது அது பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

பல பிரபலங்களை மலையாளத்தில் அவர்களை படுக்கைக்கு டார்ச்சர் செய்த பொழுது நான் தைரியமாக அவர்களை பஸ் ஏத்தி விட்டு இருக்கிறேன். எனக்கு  நாளைக்கே அந்த நடிகைகளை கூப்பிட்டு என்னால் இன்டர்வியூ செய்து இது நடந்ததா என்று கேட்டால் அவர்கள் ஆமாம் என்று சொல்வார்கள் எனக்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால் விசித்ரா சொல்லியது ஆதாரம் இல்லை. அது பெரிய இடம் அது பெரிய பிரச்சினையாக வரலாம் அதனால் அதை இப்பொழுது கூற வேண்டாம் என்று தான் சொன்னேன் என்று சொன்னார்.

 

பின்  மாயாவை பற்றியும் அங்கே பேசினார். அவர் ஆடிய டான்ஸ் மிகவும் கேவலமாக இருந்தது என்றும் கூறினார். எனக்கு அது பிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Exit mobile version