Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலயின் மச்சானா இது., என்ன ஆச்சு திரௌபதி பட ஹீரோ தலைக்கு?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

கோலிவுட்டில் 90களில் முன்னணி நடிகையாக அனைவரும் ரசித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஷாலினி மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இதனையடுத்து, ஷாலினி தமிழில் தல அஜித்துடன் பல படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தார். மேலும், அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமாவில் இருந்து விலகி, தற்போது இரண்டு குழ்ந்தைகளை பார்த்து கொண்டு வருகிறார்.

ஷாலினியை போல அவரது தங்கை ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.அத்துடன் சமீபத்தில் ஷாலினி மற்றும் ஷாமிலி இருவரும் அவரது சகோதரர் ரிச்சர்ட்டுடன் எடுத்த ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி உள்ளது.

அந்த போட்டோவில் அவரது சகோதரர் ரிச்சர்ட் தலை வெள்ளை நிறத்தில் வித்தியாசமாக இருந்தது. அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கிண்டலும், கேலியும் செய்து வருகின்றனர். மேலும், தலையை என்ன செய்தீர்கள் என்றும், தலயின் மச்சானாக இருந்து கொண்டு தலையை எதற்காக? இப்படி வைத்து உள்ளீர்கள் எனவும் கேள்விகளை சிலர் எழுப்பி வருகின்றனர்.

மேலும், சிலர் உங்களை காணும்போது எங்கள் தல அஜித்தை விசுவாசம் படத்தில் பார்த்தது போல உள்ளது என்றும் கூறுகின்றனர். நீங்கள் அதனை மீண்டும் ஞாபகம் செய்கிறீர்கள் என்று கூறி தங்களது மகிழ்ச்சிகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version