சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி :
மோலிவுட் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மேலும் அதனாலேயே தற்போது வரை அவர் பேபி ஷாலினி இன்று அழைக்கப்பட்டு வருகிறார். பின்னர் அவர் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலமாக ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
தான் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வெற்றியை கொடுத்தது. அதனை அடுத்து அவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக உருவாக தொடங்கினார். பின் அஜித் நடித்த ‘அமர்க்களம்’ என்ற ஒரு படத்தில் நடித்தார் அந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
மேலும் அமர்க்களம் படத்தின் போதுதான் அஜித்-ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதன்பின் கண்ணுக்குள்-நிலவு என்ற படத்தில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் ஷாலினி நடித்த ‘அலைபாயுதே’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதனை அடுத்து 2001 ஆம் ஆண்டு வெளியான ‘பிரியாத வரம் வேண்டும்’ என்ற படத்தில் நடித்தார்.
அதன்பின் ஷாலினி தற்போது வரை எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின், நடிகை ஷாலினி அவர்கள் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகின்ற ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும், பல நடிகர்களுடன் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. அதனை அடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.