Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஷங்கர் இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன்… வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்ட படம்

ஷங்கர் இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன்… வித்தியாசமான கதைக்களலின் பிரம்மாண்ட படம்

இயக்குனர் ஷங்கர் இப்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

எந்திரன் 2 ஆம் பாகத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஹிட் படமான இந்தியன் படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கினார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனோடு, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்து அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஷங்கர் இப்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவை கதாநாயகனாக வைத்து ‘RC 15’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளதாக சொலல்ப்படுகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் கதை என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மற்றும் இயக்குனரின் கதையை படமாக்குவது இதுவே முதன்முறையாகும்.

இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து படத்துக்கு ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்வதாக சொல்லப்படுகிறது. முன்னதாக சிட்டிசன் என்ற தலைப்பும் படக்குழுவால் யோகிப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதிகாரி மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களை இயக்கி முடித்த ஷங்கர் ரண்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்க உள்ளார். அந்த படத்தை முடித்த பின்னர் இந்தி நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் பிரம்மாண்டமான கதை ஒன்றை இயக்க உள்ளாராம். இந்த படம் முழுக்க முழுக்க நீருக்கடியில் படம்பிடிக்கும் விதமாக உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version