Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடிய பங்குச்சந்தை!!

பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடி வருகிறது. இதனால் தள்ளாட்டம் கண்ட தள்ளாட்டம் கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 23 புள்ளிகளை இழந்தது.

காலையில் எழுச்சி நிலையில் இருந்தது உலகளாவிய சந்தைகளில் இருந்து நேர்மறையான  குறிப்புகள் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டு நிதி  வரவுகள் இருந்தபோதிலும்,  குறிப்பிட்ட சில பங்குகளின் நடவடிக்கைகளால் பிற்பகல் வர்த்தகத்தின் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது.

குறிப்பாக சமீபத்தில் வெகுவாக உயர்ந்திருந்த மார்க்கெட் ஜாம்பவான்களான ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இரு நிறுவனங்களின் பங்குகள் லாப பதிவினால் சரிவில் முடிந்தது,

இதைத்தொடர்ந்து சென்செக்ஸ்,  தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version