Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்!!!

கடந்த வாரத்தின் பங்குச்சந்தையை போலவே இந்த வாரமும் பங்கு சந்தையில் மீண்டும் காளையில் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த போதிலும் பலவீனமான பொருளாதார நடவடிக்கைகள் இருந்து வந்தாலும்  சந்தையில் காளை உடைய ஆட்டம் தான் அதிகம் உள்ளது.

நேர்மறையான உலகளாவிய குறிப்புகள் மற்றும் பொருளாதாரத்தை மீட்க மத்திய ரிசர்வ் வங்கியின் கூடுதல் நடவடிக்கைகள் ஆகியவை காளையின் பாய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.68 புள்ளிகள் ( 1.15%) உயர்ந்து 38,040,57இல் நிலைபெற்றது. நிப்டி 140.60 புள்ளிகள் ( 1.26%) உயர்ந்து 11,214,05 இல் நிலைபெற்றது.

ஐடி தவிர அனைத்து துறை குறியீடுகளும் வாராந்திர  லாபங்கள் பங்கேற்றன.அதேநேரத்தில் இனிப்பின் மிட்கேப் குறியீடு 4 சதவீதமும் ஸ்மால் கேப் குறியீடு 5 சதவீதமும் உயர்ந்தன.

இதற்கிடையே மும்பை பங்குச்சந்தையில்  பிஎஸ்இ 500 பட்டியலில் 174 நிறுவன பங்குகள் கடந்த வாரத்தில் மட்டும் 10 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.

Exit mobile version