Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி?

#image_title

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி?

கடல் மீன் வகைகளில் சுறா மீனும் ஒன்று. இந்த சுறா மீனில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு சிறந்த உணவாக அமைகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நன்றாக பால் சுரக்கும்.

சரி வாங்க எப்படி சுறா புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1 கிலோ

வெங்காயம் – 7 ( பொடியாக நறுக்கியது )

பூண்டு – 20 பல் பெரியது ( பொடியாக நறுக்கியது )

இஞ்சி – 2 பெரிய துண்டு ( பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய் – 6 ( பொடியாக நறுக்கியது )

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லி தூள் – 1 ஸ்பூன்

மிளகு தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

செய்முறை

முதலில் சுறாவை நன்றாக சுத்தம் செய்து அதை இரண்டாக வெட்டி 5 முதல் 8 நிமிடம் வரை வேக விட வேண்டும்.

பின்னர், வெந்நீரில் இருந்து எடுத்து மீனை எடுத்துவிட்டு, அதன் மேல் உள்ள தோலை உரித்து எடுத்து விட வேண்டும்.

இதன் பின்னர், தோல் உரித்த மீனை 2 முறை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிழிந்து எடுத்த மீனை நன்றாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த மீனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பிறகு பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், மீன் மசாலாவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

மிதமான தீயில் நன்றாக வேகவைத்து விட்டு இறக்கினால் சுறா புட்டு ரெடி. மேலே கொஞ்சம் கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொள்ளலாம்.

 

Exit mobile version